Wednesday, March 10, 2010

வென்றாக வேண்டும் தமிழ்


தாய் வளர்த்த ஊணிற்குள் தமிழ் வளர்ந்து நிற்கிறது
உடலை விட்டு உயிர் பிரினும் தமிழ் மட்டும் பிரியாதது


வங்கக் கடல் பொங்கினும் சங்கத் தமிழ் நிலைக்கட்டும்
எஞ்சிய தமிழாயினும் அனைத்தையும் மிஞ்சிய தமிழாகட்டும்


எதிர்கால தமிழன் எழுந்து நிற்கட்டும்
ஏளனம் செய்வோரை எட்டி உதைக்கட்டும்


யுத்தத்தின் ரத்தத்தில் ஈழத் தமிழ்
முத்தத்தின் சத்தத்தில் கன்னித் தமிழ்


கவிஞனின் படைப்பில் கற்பனைத் தமிழ்
கலைஞரின் பேச்சில் விற்பனைத் தமிழ்


கண்ணதாசனின் வரிகளில் கவிதைத் தமிழ்
கணேசனின்(சிவாஜி) கண்களில் கரையும் தமிழ்


மழலையின் மொழியில் கொஞ்சு தமிழ்
மரியாதையின் மடியில் கொங்கு தமிழ்


அக்கரைச் சீமையிலே ஆட்சித் தமிழ்
உலக அரங்கில் இன்று நம் இசைத் தமிழ்


மடமையைக் கொளுத்தும் மந்திரம், தமிழ்
அச்சத்தைக் களையும் எந்திரம், தமிழ்


புரட்சி என்ற பேருக்கு பூர்வீகம், தமிழ்
புண்ணியம் தேடிய பலருக்கு புகுந்த வீடு, தமிழ்


இருண்டுக்கிடந்த மனிதருக்குள் சிந்திய வெளிச்சம், தமிழ்
இதர நாட்டு மக்களுக்கு இந்திய பெருமை, தமிழ்


ஐந்தாம் மதம் - தமிழ், ஏழாம் அறிவு - தமிழ்
வாழும் கடவுள் - தமிழ், வாழ்வு முறை - தமிழ்


ஔவைப் பாட்டி அள்ளி முடித்த தமிழ்
அண்டம் யாவும் சொல்லி அடித்த தமிழ்


தமிழறியா தமிழன் மீது உமிழ்
வென்றாக வேண்டும் தமிழ்.